அடுத்த 24மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழை!

தென் தமிழகத்தையொட்டி உள்ள வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருவதால் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் கிழக்கு திசை காற்று வலுப்பெற்றதால் நேற்று இரவு முதல் தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், அணைக்கரை, ஆகிய பகுதிகளில் இரவு முதல் நல்ல மழை பெய்து வந்தது. இதே போல் திருவாரூர், திருச்சி, நாகை, கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது.

தற்போதைய வானிலை நிலவரத்தின்படி மாலத்தீவுகள் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.      

 

More News >>