தளபதி 63ல் இந்துஜாவுக்கு என்ன ரோல்?

மேயாத மான், பில்லா பாண்டி படங்களில் நடித்த இந்துஜா சர்கார் படத்தில் நடிக்க கமீட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன்.

மேயாத மான் படத்தில் நாயகனின் தங்கையாக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்திய இந்துஜா மெர்க்குரி, பில்லா பாண்டி படங்களில் நாயகியாக உருவெடுத்தார்.

இந்நிலையில், தளபதி 63 படத்தில் இந்துஜா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்லி இயக்கும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா கமீட் ஆகியுள்ளார். நயனின் தோழியாகவா? அல்லது விஜய்யின் தங்கையாகவா அல்லது மற்றொரு நாயகியாகவா? எந்த கதாபாத்திரத்தில் இந்துஜா நடிக்கப் போகிறார் என தெரியவில்லை. ஆனால், நிச்சயம் அவருக்கு வலுவான கதாபாத்திரம் தான் கிடைக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News >>