ஜீரோ பட ஷூட்டிங்கில் திடீர் தீ விபத்து: உயிர் தப்பினார் ஷாருக்கான்!
ஜீரோ பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் நடிகர் ஷாருக்கான்.
இந்தி நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் ஜீரோ படத்தின் படபிடிப்பு மும்பை கோரேகான் திரைப்பட நகரில் ஷெட் அமைத்து நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நடிகர் ஷாருக்கான் ஷெட்டில் நடித்து கொண்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு 4 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர்.
இருப்பினும் படப்பிடிப்புக்கான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.