இன்னொரு படத்தை ஓட வைக்க விரும்பவில்லை - 2.0 படம் குறித்த கேள்விக்கு தமிழிசை பதில்
ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படத்தை பற்றிய கேள்விக்கு இன்னொரு படத்தை தான் ஓட வைக்க விரும்பவில்லை என தமிழிசை பதில் கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாஜக சார்பில் இதுவரை ரூ.25 லட்சம் மதிப்பில் மருந்துகள் உட்பட சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேகதாதுவில் அணை கட்ட ஆய்வு செய்ய மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நான்கு மாநிலங்களின் ஆலோசனையை கேட்காமல் மேகதாதுவில் அணை கட்டப்படாது. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடியாது. கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக பாஜக எதிர்க்கும்.
இதனையடுத்து ஸ்டெர்லைட் அறிக்கை மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. மக்களைப் பாதிக்கும் எதையும் பாஜக ஒத்துக் கொள்ளாது என்றார்.
மேலும், ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படத்தை பற்றிய கேள்விக்கு இன்னொரு படத்தை தான் ஓட வைக்க விரும்பவில்லை என பதிலளித்தார்.