ஏ.ஆர். ரஹ்மானின் இன்னொரு ஸ்லோ பாய்ஸன் இதோ!
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் சர்வம் தாளமயம் பாடல் லிரிக் வீடியோவை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது வெளியிட்டுள்ளார்.
மின்சார கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம் சர்வம் தாள மையம். இசையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால், இசை அறிவு மிகுந்த நாயகனை தேடிய ராஜீவ் மேனன், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள சர்வம் தாளமையம் எனும் டைட்டில் டிராக் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.
மதன் கார்க்கியின் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் உள்ளுணர்வுகளையும் இசையார்வத்தையும் தூண்டும் விதமாக சர்வ தாளம் போடுகின்றது.