தோனியாக மாறிய ரஷித் கான் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்தல்!

ஐக்கிய அமீரகத்தில் நேற்று நடைபெற்ற டி10 போட்டியில் ரஷித் கான் தோனியின் ஐகானிக் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து அசத்தினார்.

ஐக்கிய அமீரகத்தில் 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், சேவாக் தலைமையிலான மராத்தா அரேபியன்ஸ் மற்றும் பாக்தூன்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில், மராத்தா அரேபியன்ஸ் அணியில் விளையாடிய ஆல்ரவுண்டர் ரஷித் கான், 9வது ஓவரின் கடைசி பந்தில் ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்ஸர் அடித்து அசத்தினார்.

தோனியின் ஐகானிக் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டை ரஷித் கான், அடித்ததை கேப்டன் சேவாக் உள்ளிட்ட மராத்தா அரேபியன்ஸ் அணியினர் மற்றும் ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

More News >>