அன்புக்கு மொழி கிடையாது ட்வீட்டரில் ரஹ்மான் நெகிழ்ச்சி

லண்டன் நகரில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடத்திய' நேற்று இன்று நாளை' இசை நிகழ்ச்சியில் வட இந்தியர்கள் சிலர், இந்திப் பாடல்களை பாட வற்புறுத்தினர். தமிழ் மக்களுக்காக நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சில் ரஹ்மான் நான்கு இந்திப் பாடல்களைளயும் பாடியுள்ளர். ஆனாலும், திருப்தியடையாத வட இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கட்டணப் பணத்தை திருப்பித் தருமாறு ட்விட் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரஹ்மான் கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நியூயார்க் நகருக்கு இசை நிகழ்ச்சி நடந்த சென்ற ரஹ்மானுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. ரசிகர்களிடையே பேசிய ரஹ்மான், நீங்கள் தந்த உற்சாகத்தை மறக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். மேலும் தன் ட்வீட்டரில், ''அன்பு செலுத்த மொழி அவசியமில்லை; என்னால் முடிந்தளவு சிறந்த படைப்புகளை வழங்குகிறேன். மக்கள் தரும் ஆதரவுக்கு நன்றி '' எனத் தெரிவித்துள்ளார்.

வடஇந்தியர்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள், இசைக்கு எந்த மொழியும் கிடையாது; உண்மையிலேயே இசையை விரும்புபவர்கள் இது போன்றக் காரியத்தில் ஈடுபடமாட்டார்கள் எனப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More News >>