ஈசியா சமைக்கலாம் முட்டை கொத்து பரோட்டா
இன்னைக்கு நாம முட்டை கொத்து பரோட்டா ஈசியா எப்படி சமைக்குறதுனு பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
முட்டை - 3வெங்காயம் -2தக்காளி - 1கரம் மசாலா - 1 /2 டீஸ்பூன்மிளகாய் தூள் - 1 /2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகைஉப்பு - 1 /4 டீஸ்பூன்மிளகு தூள் - 3 டீஸ்பூன்பரோட்டா - 3கொத்தமல்லி -3 டீஸ்பூன்11. கறிவேப்பில்லை - 1012. எலுமிச்சம் பழ சாறு- 3 டீஸ்பூன்13. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
பரோட்டாவை பொடியாக நறுக்குங்கள் (அல்லது) மிக்சில ஒரு ஓட்டு ஓட்டி துண்டுகளாகவும் ஆக்கலாம்.முட்டையை நன்கு அடித்து கொள்ளுங்கள். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்குங்கள். பின் தக்காளி வதக்கவும். அத்துடன், கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் பரோட்டா சேர்த்து வதக்கவும், நன்றாக கொத்தி கிண்டவும் பிறகு அடித்த முட்டை சேர்த்து நன்றாக கிண்டவும். கடைசியாக மிளகு தூள் சேர்க்கவும். கொத்தமல்லி தூவி இறக்கவும்.
பரிமாறும் போது எலுமிச்சம் பழ சாறு பிழிந்து பரிமாறவும். அவ்ளோதாங்க சுவையான முட்டை கொத்து பரோட்டா ரெடி !