மின்னல் வீரனில் இணைந்த பார்வதி நாயர்!
மரகதநாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் மின்னல் வீரன் படத்தில் பார்வதி நாயர் கமீட்டாகியுள்ளார்.
தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்த மலையாள நடிகை பார்வதி நாயர், அவ்வப்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக, உதய்நிதி ஸ்டாலினின் நிமிர் போன்ற படங்களில் நடித்த அவர், இம்மாதம் வெளியாகவுள்ள விஜய்சேதுபதியின் சீதக்காதி படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மரகதநாணயம் எனும் வெற்றிப் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கும் மின்னல் வீரன் படத்தில் அதர்வா நடிக்கிறார். அதர்வாவுக்கு ஜோடியாக பார்வதி நாயர் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
சில படங்களில் நடித்தாலும், இதுவரை இவரது நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. அதற்கான சரியான வாய்ப்பும் இவருக்கு அமையவில்லை என்று கூட கூறலாம். இந்நிலையில், புதிய படத்திலாவது இவருக்கு நடிக்க நல்ல ஸ்கோப் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.