என் திருமணம் தந்தையின் விருப்பப்படியே நடந்தது: காடுவெட்டி குருவின் மகள்
தன் தந்தையின் விருப்பப்படியே தான் திருமணம் செய்து கொண்டதாக காடுவெட்டி குருவின் மகள் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி பகுதியை சேர்ந்தவர் காடுவெட்டி குரு. வன்னியர் சங்க தலைவரும், பாமக முன்னாள் எம்எல்ஏவுமான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார். இவரது மரணத்திற்கு பிறகு, அவரது குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவு ஏற்பட்டு வந்துள்ளது.
இவருடைய மகள் விருத்தாம்பிகை (20) மற்றும் காடுவெட்டி குருவின் தங்கை சந்திரலேகாவின் மகன் மனோஜ் கிரண் (27) என்பவரும் ஒருவரையருவர் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கும்பகோணத்தில் விருத்தாம்பிகை மற்றும் மனோஜ் கிரண் ஒரு சில உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அங்கு, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்.இந்நிலையில், கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காடுவெட்டி குருவின் மகள், தனது திருமணத்திற்கு தாய் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால், அவரிடம் கூறாமல் திருமணம் செய்துக் கொண்டேன். தந்தையின் விருப்பப்படியே என் திருமணம் நடைபெற்றது என்று கூறினார்.