அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் இன்று காலமானார்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (94). கடந்த 1989ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை அதிபராகவும், இதற்கு முன்பு 1981ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை துணை அதிபராகவும் பொறுப்பு வகித்தவர்.
முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிற்கு முன்பு, ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷின் மகனான, ஜார்ஜ் டபிள்யூ புஷ் கடந்த 2001ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை இரண்டு முறை அந்நாட்டின் அதிபராக பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், ஜார்ஜ் ஹெச். டபிள்யூ புஷ் கடந்த சில ஆண்டுகளாக வயது முதிர்வு காரணங்களால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நிமோனியா எனப்படும் பிரச்னையாலும் புஷ் அவதிப்பட்டு வந்தார்.
பல முறை உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஹ¨ஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் அடிக்கடி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் இன்று காலமானார். இந்த செய்தியை, அவரது செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.