ஜீவாவுக்கு ஜோடியாகும் மஞ்சிமா மோகன்!
சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மஞ்சிமா மோகன், ஜீவாக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.
மலையாள கதாநாயகியான மஞ்சிமா மோகன், கெளதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். மேலும் சத்திரியன் என்னும் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியகவும், இப்படை வெல்லும் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாகவும் நடித்தவர்.
இப்போது குறும்பட இயக்குனர் ராஜேஷ் இயக்கதில் ஜீவா, அருள்நிதி சேர்ந்து நடிக்கும் படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார்.
அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறதாம். இந்த படம் ஒருநல்ல கமர்ஷியல் படமாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.