விஜய்க்கு வில்லனாகப் போகும் பாலிவுட் நடிகர் யார்?
’தளபதி 63’ படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ஒருவரை அட்லி இறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்ஷய் குமார் நடித்த நிலையில், ’தளபதி 63’ படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ஒருவரை அட்லி இறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ’தளபதி 63’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.
‘தளபதி 63’ படப்பிடிப்புக்காக ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் தலைமையில் செட் அமைக்கும் வேலைகள் விறு விறுப்பாக நடைப்பெற்று வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் தொடர்ச்சியாக மூன்றாவது முறை விஜய் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், விஜய்க்கு வில்லனாக வெயிட்டான பாலிவுட் நடிகரை களமிறக்க அட்லி முடிவு செய்துள்ளார். ஏற்கனவே 2.0 படத்தில் அக்ஷய் குமாரும் பேட்ட படத்தில் நவசுதின் சித்திக் போன்ற பாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளனர்.
விஜய்க்கும் அடுத்த லெவல் மாஸ் கூட்ட பிரபல பாலிவுட் ஹீரோக்களிடம் கதை சொல்லி வலை வீசி வருகிறார் அட்லி, விரைவில் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
மேலும் இந்த படத்தில் டேனியல் பாலாஜி முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
ஏற்கனவே பைரவா படத்தில் விஜயும் டேனியல் பாலாஜியும் சேர்ந்து நடித்துள்ளனர். ஹிந்தி நடிகர் நடிக்க உள்ளதால் இந்த படம் இரு மொழிகளில் தயாராகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.