சைவ பிரியர்களுக்காக.. காளிபிளவர் பக்கோடா ரெசிபி
சைவ பிரியர்களே.. இன்னைக்கு உங்களுக்காக காளிபிளவர் பக்கோடா எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..
தேவையான பொருட்கள்:
காலிபிளவர் – ஒரு கப்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது – கால் டீஸ்பூன்
கடலை மாவு – ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
சோளமாவு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை:
காலிபிளவரை துண்டுகளாக நறுக்கி, உப்பு, மஞ்சள் தூள் கலந்து நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும் .
பிறகு காலிபிளவரை எடுத்து கொதிக்கும் நீரில் நாப்பது நிமிடங்கள் போட்டு, வடித்தெடுக்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர்விட்டு நான்கு கலத்து கொள்ளவும்.
இதில் ரெடியாக உள்ள காலிபிளவர் துண்டுகளை முக்கி எடுத்து எண்ணெய்யில் பொரித்தெடுக்கயும்.அவ்ளோதாங்க சுவையான காளிபிளவர் பக்கோடா ரெசிபி ரெடி!