காடுவெட்டி குரு மகள் திருமண விவகாரம்.... ராமதாஸுக்கு வேல்முருகன் சகோதரர் எச்சரிக்கை!
வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் தாய் மற்றும் சகோதரர் மீதான தாக்குதலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகனின் சகோதரர் தி. திருமால்வளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, அவரது அத்தை மகன் மனோஜை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸின் ஆதரவாளர்கள் இத்திருமணத்தை ஏற்கவில்லை.
இதனால் காடுவெட்டி கிராமத்தில் இருந்து குருவின் குடும்பத்தினர் ஒதுக்கி வைக்கப்பட்டனர். இதையடுத்து ராமதாஸ் மீது காடுவெட்டி குருவின் சகோதரி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
அதேநேரத்தில் காடுவெட்டி குருவின் மனைவி லதாவோ, ராமதாஸுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் காடுவெட்டி குருவின் தாய் மற்றும் சகோதரி ஆகியோரை கும்பல் ஒன்று தாக்கி காயப்படுத்தியுள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்டிருட்டி தி. வேல்முருகனின் சகோதரர் தி. திருமால்வளவன், ராமதாஸுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக திருமால்வளவன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவுகள்: