லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ் சமூகத்தை இளைஞர்கள்தான் உருவாக்க முடியும்: சகாயம் ஐஏஎஸ் நம்பிக்கை

லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத தமிழ் சமூகத்தை இளைஞர்களால்தான் உருவாக்க முடியும் என்று சகாயம் ஐ.ஏ.எஸ். நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் இலக்கிய களம் நடத்தும் 7-வது புத்தக திருவிழாவில் பங்கேற்று சகாயம் பேசியதாவது:

புத்தகங்கள் சமூகத்தின் அறிவு கதவை திறப்பவை. எல்லா அறிவையும் பெற்றது தமிழ் சமூகம். பள்ளி, கல்லுாரிகளில் படிப்பதை விட வெளியே அதிகமான நுால்களை படிக்க வேண்டும்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற சூழல் நிலவுகிறது. 1 கோடி பேர் படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர்.

இயற்கை வளங்களை சுரண்ட நாம் அனுமதித்து விட்டோம். இன்று விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. 15 ஆண்டுகளில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

லஞ்சம், ஊழல் தான் செழித்து வளர்ந்துள்ளது. லஞ்சம், ஊழலற்ற சமூகத்தை இளைஞர்களால் தான் உருவாக்க முடியும்.  

அறிவியல் புரட்சி அமைய புத்தகங்களை படியுங்கள். மாணவர்களுக்கு படிப்போடு உண்மை, நேர்மையை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுங்கள்.

இவ்வாறு சகாயம் ஐ.ஏ.எஸ். பேசினார்.

 

More News >>