பிரதமர் மோடி 2 வகை போதைகளுக்கு அடிமை.... வைகோ பகீர் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி 2 வகை போதைகளுக்கு அடிமையாகிவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த பேட்டி:

லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் ஒன்று திரண்டு போராடினார்கள். அதைப்பற்றி பிரதமர் மோடி கண்டு கொள்ளவில்லை.

1,000 ஆண்டுகளுக்குப் பிறகு சோழ நாடு பேரழிவை சந்தித்துள்ளது. அதைப் பார்வையிட பிரதமர் மோடி வரவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி 2 வகையான போதைகளுக்கு அடிமையாகிவிட்டனர். ஒருநாளைக்கு 7,8 முறை டிரஸ் மாற்றுவது; நாள்தோறும் ஒரு நாட்டுக்கு பயணம் செல்வது என்கிற போதைகளுக்கு மோடி அடிமையாகிவிட்டார்.

மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி தேவை இல்லை என்கிற முடிவு ஆபத்தானது. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கவே மேகதாது அணைக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.

காவிரி டெல்டா விளைநிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க மோடி அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. இதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.

\

இவ்வாறு வைகோ கூறினார்.

More News >>