10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- சென்னை மாதவரம் சப் இன்ஸ்பெக்டர் போக்சோவில் கைது
சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாதவரம் சப் இன்ஸ்பெக்டர் வாசு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதவரம் பால் பண்ணை காவல்நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் வாசு. வில்லிவாக்கத்தில் நேற்று இரவு 10 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அந்த வழியாக சென்ற வாசு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்தனர்.
மக்கள் கூட்டமாக வருவதை தெரிந்து கொண்ட வாசு அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பாக வில்லிவாக்கம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சப் இன்ஸ்பெக்டர் வாசுவை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர். சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.