55வது நாளாக குறையும் பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்றுடன் 55வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து ரூ.75க்கும் கீழ் விற்பனையாகி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத விலை உயர்வை எட்டியது. தினசரி நிர்ணயம் செய்யப்படும் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து லிட்டருக்கு 88 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த வேதனையில் இருந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையத் தொடங்கியது. அன்று முதல் படிப்படியாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் குறைந்து இன்று ரூ.74.63க்கு விற்பனையாகிறது. இதேபோல், டீசல் விலையில் 39 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.70.38க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவதற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் அமெரிக்க டாலர் மதிப்புக்கு வீழ்ச்சியடைந்துள்ளதும் காரணம் என்று கூறப்படுகிறது.

More News >>