2022ம் ஆண்டில் இந்தியாவில் ஜி-20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி

ஜி-20 உச்சி மாநாடு வரும் 2022ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

உலகளவில் ஆண்டுதோறும் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள முதல் 20 நாடுகள் இணைந்து ஜி-20 என்ற பெயரில் உச்சி மாநாட்டை நடத்தி வருகின்றன. ஆண்டுதோறும் ஏதாவது ஒரு உறுப்பு நாட்டில் நடத்தப்படும் உச்சி மாநாட்டில் இந்தியாவும் பங்கேற்று வருகிறது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த உச்சி மாநாடு இம்முறை அர்ஜென்டிவாவின், பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், 20 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், வரும் 2022ம் ஆண்டு நடைபெறும் உச்சி மாநாடு இந்தியாவில் நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரையில் உச்சி மாநாடு நடந்ததில்லை. வாய்ப்பளித்திருப்பது இதுவே முதல்முறை. இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டில் மாநாடு நடத்துவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய இத்தாலிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை 2022ம் ஆண்டில் நிறைவு செய்கிறது. சிறப்புமிக்க இந்த ஆண்டில் ஜி-20 நாட்டு தலைவர்களை இந்தியாவிற்கு வர்வேற்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் பன்முகத்தன்மையை தெரிந்து கெள்வதுடன், அன்பான விருந்தோம்பலையும் உணருங்கள் என்று பிரதமர் மோடி ஜி20 தலைவர்களுக்கு அழைப்புவிடுத்து குறிப்பிட்டிருந்தார்.

More News >>