உங்களின் பேராதரவுடன் 2-வது ஆண்டில் தி சப் எடிட்டர் !
அன்பார்ந்த வாசகர்களே!
தங்களின் பேராதரவுடன் உங்களது தி சப் எடிட்டர் இணையதளம் 2-வது ஆண்டில் பயணத்தைத் தொடங்குகிறது.
புதிய செய்தி இணையதளம் எனக் கருதாமல் கடந்த ஓராண்டாக நீங்கள் தொடர்ந்து பார்வையிட்டு எங்களை ஊக்கப்படுத்தி வருகிறீர்கள்..
உங்களது தொடர்ச்சியான வருகையால் எங்களை உற்சாகப்படுத்தி ஊக்கம் அளித்துள்ளீர்கள்.. வழக்கமான செய்திகளை மட்டும் அல்லாமல் அரசியல் உலகின் அத்தனை நிகழ்வுகளையும் உங்களுக்கு இடைவிடாமல் வழங்கி வருகிறோம்.
இந்த பயணம் தொடர உங்களது பேராதரவு நீடிக்க வேண்டும். நேர்மையுடன், நெஞ்சுரத்துடன் நமது பயணத்தை உங்களுடன் இணைந்து தொடருகிறோம்..
-ஆசிரியர் குழு