பொன் மாணிக்கவேல் போன்று வேடமணிந்து காவடி எடுத்த சமூக ஆர்வலர்!

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து சமூக ஆர்வலர் நர்மதா நந்தகுமார் என்பவர் பொன் மாணிக்கவேல் போன்று வேடமணிந்து காவடி எடுத்தார்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் தஞ்சை பெரிய கோயிலில் இருந்து திருடப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகளை குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்தும், நடராஜர் சிலைகளை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்.

கடந்த நவம்பர் 30ந் தேதி பொன் மாணிக்கவேல் ஒய்வு பெற்றார். பின், ஒய்வு பெற்ற அதே நாளில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஐஜி பொன் மாணிக்கவேலின் பதவியை மேலும் ஓராண்டு நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுவரை விசாரணை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது என என்னென்ன பணிகளை இதுவரை செய்துவந்தாரோ அதே பணிகளை அவர் தொடர்வார் என உத்தரவிட்டது.

இந்நிலையில், பொன் மாணிக்கவேலுவுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, திருத்தணி முருகன் கோயிலில், சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா நந்தகுமார், ஐஜி பொன் மாணிக்கவேல் போன்று வேடமிட்டு ஞாயிற்றுக்கிழமை காவடி எடுத்தார்.

More News >>