சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டம் வரலாறு காணாத வகையில் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு பிறகு, மெரினா கடற்கரையில் எந்த ஒரு போராட்டமும், பொதுக்கூட்டமும் நடத்த தமிழக அரசு தடை விதித்தது.

ஆனால், மெரினாவில் ஒரு நாள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம்  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, அய்யாக்கண்ணு மெரினா கடற்கரையில் அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது என்றும் மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என்றும் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

More News >>