பணம் வந்ததும் தமிழை சிதைத்த வைரமுத்து பகிரங்க மண்ணிப்பு கேட்க வேண்டும்! - தமிழிசை கண்டனம்

பணம் வந்தது என்று பல வரிகளை தமிழை சிதைத்து பாடல் எழுதிய கவிஞர் இன்று வரலாற்றை சிதைத்து எழுந்திருப்பது வருந்தத்தக்கது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து அவர்கள், ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை என்றும், கலாச்சார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள் என்றும் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இதனையடுத்து அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்தார்.

இந்நிலையில், இது குறித்துக் கூறியுள்ள தமிழிசை சௌவுந்தரராஜன், ”கவிஞர் வைரமுத்து ஆண்டாளைப் பெருமைப்படுத்துகிறேன் என்று பேசவும் எழுதவும் ஆரம்பித்து சிறுமைப் படுத்தியிருக்கிறார். தேவதாயாக பெண் ஆழ்வாராக பெருமை சேர்த்தவரை தேவதாசியாக சித்தரிக்க எப்படி மனம் வந்தது?

பணம் வந்தது என்று பல வரிகளை தமிழை சிதைத்து பாடல் எழுதிய கவிஞர் இன்று வரலாற்றை சிதைத்து எழுந்திருப்பது வருந்தத்தக்கது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அனைவரின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. ஆனால் அந்த வருத்தமும் மன்னிப்பும் கேட்பதில் கூட தயக்கம் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நான் மேற்கோள் தானே காட்டினேன் என எழுதிய தப்பிற்கு வருந்தாமல் தப்பிக்கும் போக்கே தெரிகிறது. தமிழ் என்பது ஆன்மீகத் தமிழ் அதுவும் அண்ணா வளர்ப்பதற்கு முன்னாலேயே ஆண்டாள் வளர்த்தால், ஆனால் பெரியார் தமிழை வளர்த்தார் என பொய்யாக சொல்பவர் பெரியாழ்வார் வளர்த்தார் நம்ப மறுப்பதும் வைரமுத்துவை இப்படி பேச வைக்கிறது.

தமிழைப் பழித்தவரை தாய் தடுத்தாலும் விடேன் என்ற பாரதியின் வார்த்தையை தமிழ் வளர்த்த ஆண்டாளைப் பழித்தவரை யார் தடுத்தாலும் விடோம் என்பதே எங்களது நிலை. மனது புண்பட்டால் வருந்துகிறேன் என்பது மட்டுமே பண்படாமல் எழுதிய வாசககங்களுக்கு பதில் ஆகாது உடனே கட்டுரையை மாற்றி எழுத்து பூர்வமாக பதிவு செய்வது மட்டுமின்றி இனிமேல் இதுபோன்று உணர்வுகளை காயப்படுத்த மாட்டேன் என உள்ளார்ந்து எழுத்து பூர்வமாகவும், கருத்து பூர்வமாகவும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் மறுப்பு ஏதோ வெறுப்பை மனதில் வைத்தே கொடுத்தைப்போல் உள்ளதால் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை வருத்தத்துடன் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>