யூடியூப் வீடியோக்களை வாட்ஸ் அப்பில் பார்ப்பது எப்படி?

'படத்திற்குள் படம்' (Picture-in-Picture) வாட்ஸ் அப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வசதியாகும். யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற மூன்றாம் நபர் செயலிகளில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களை வாட்ஸ் அப் செயலியில் பார்ப்பதற்கு இந்த வசதி உதவுகிறது. முன்பு, வீடியோக்களை இணைப்புகள் மூலம் அந்தந்த செயலிகளுக்கு சென்று அல்லது மொபைல் பிரௌசர் என்னும் உலவிகள் மூலமாகவே பார்க்க இயலும். தற்போது வாட்ஸ் அப்பை விட்டு வெளியில் வராமலேயே 'படத்திற்குள் படம்' (PiP) என்ற வசதியின் மூலம் தேவையான வீடியோக்களை பார்க்கலாம்.

'படத்திற்குள் படம்' வசதி அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கவில்லை. அந்த வசதி வேண்டுமானால் நீங்கள் வாட்ஸ் அப்பின் பீட்டா நிரலுக்கு பதிவு செய்திட வேண்டும். வாட்ஸ் அப் கொண்டு வரும் அனைத்து புதிய அம்சங்களையும் பயன்படுத்திட பீட்டா செயலியின் மூலம் இயலும். பீட்டா செயலியிலும் சில குறைபாடுகள் இருக்கின்றன.கூகுள் பிளே ஸ்டோரில் வாட்ஸ் அப் பகுதிக்கு செல்லுங்கள். "become a beta tester" (பீட்டாவை பரிசோதிக்க) என்ற செயலியை தரவிறக்கம் செய்து, பீட்டா நிரலில் நீங்களும் பங்கேற்கலாம்.

பீட்டா செயலியை நிறுவிய பிறகு, உங்கள் போனில் யூடியூப் செயலியை திறக்க வேண்டும். வலப்பக்க மேல் மூலையில் உள்ள "forward" என்ற பொத்தானில் சொடுக்கவும். பின்னர் உங்களுக்கு வேண்டிய குழுக்கள் அல்லது தொடர்பு எண்ணுக்கு அதை பார்வேர்டு செய்யுங்கள். வீடியோவுக்கான இணைப்பு, முழு தலைப்புடனும் பகிரப்படும். அதை சொடுக்கினால், வீடியோ ஓடத்தொடங்கும்.

வாட்ஸ் அப்பின் அரட்டை பெட்டியில் (Chat box) இந்த வீடியோ தானாகவே தோன்றும் (pop out). வாட்ஸ் அப் செயலியை விட்டு வெளியே வராமலேயே இந்த வீடியோவை உங்கள் ஸ்மார்ட்போனில் திரையின் எந்த இடத்திலும் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். இந்த படத்திற்குள் படம் வசதியில் சில மட்டுறுத்தல்கள் உண்டு. உதாரணமாக, யூடியூப்பில் நாம் கையாளக்கூடிய தரத்தை மாற்றுவது, விளக்கங்கள் இடுவது போன்ற அனைத்து கட்டுப்பாடுகளையும் இங்கிருந்து செய்ய இயலாது.

More News >>