தமிழிசை சவுந்தரராஜனால்தான் நோட்டோவுக்கு கீழே ஓட்டுகள்.... பிக்பாஸ் நடிகை காயத்ரி ரகுராம் பாய்ச்சல்!
தமிழக பாஜகவை தமிழிசை சவுந்தரராஜன் வளர்க்கவில்லை; அவரால்தான் நோட்டாவுக்கு கீழே ஓட்டுகள் வாங்கும் நிலை என பிக்பாஸ் நடிகை காயத்ரி ரகுராம் சாடியுள்ளார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசில் காயத்ரி ரகுராம் சிக்கியதாக தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்த காயத்ரி, பாஜகவினரே இதற்கு காரணம் என்றார்.
தமிழிசை சவுந்தரராஜனோ, பாஜகவிலேயே காயத்ரி ரகுராம் இல்லை என ஒரே போடாகப் போட்டார். அதற்கும் காயத்ரி ரகுராம் மல்லுக்கட்டியிருந்தார்.
இந்நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில், கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் சாதனைகளை மக்களிடத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கொண்டு சேர்க்கவில்லை. அவர் சரியாக செயல்படவில்லை.
அதனால்தான் நோட்டாவுக்கு கீழே ஓட்டுகள் வாங்கும் நிலை இருக்கிறது என சாடியிருக்கிறார் காயத்ரி ரகுராம்.