6ஜிபி இயக்க வேகம் கொண்ட நோக்கியா 8.1: டிசம்பர் 10ம் தேதி வருகிறது
டிசம்பர் 10ம் தேதி முதல் சந்தைக்கு வரவிருக்கும் நோக்கியா 8.1 போனின் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.18 அங்குலம்; Full HD தரம்; 18.7:9 விகிதாச்சாரம்பிராசஸர்: குவால்கோம் ஆக்டா கோர் ஸ்னாப்டிரகான் 710 10என்எம்; சிஸ்டம் ஆன் சிப் ஆட்ரினோ 616 ஜிபியூஇயக்க வேகம்: 6 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபி; 400 ஜிபி வரை மைக்ரோஎஸ்டி மூலம் கூடுதல் அளவு பெறலாம்இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பைசிம் கார்டு: இரண்டு நானோ கார்டுகளுடன் மைக்ரோ எஸ்டி பயன்படுத்த வசதிமுன்பக்க காமிரா: 20 மெகாபிக்ஸல் காமிரா; f/2.0 அபெர்சர் திறன்பின்பக்க காமிராக்கள்: 12 மெகாபிக்ஸல் 1/2/55" சோனி ஐஎம்எஸ்363 சென்ஸார் மற்றும் f/1.8 அபெர்சர் திறன்; எல்இடி பிளாஷ்; 1.4μm பிக்ஸல் தரத்துடன் ஒன்றும் 13 மெகாபிக்ஸல்; f/2.2 அபெர்சர் திறனுடன் ஒன்றும்மின்கலம்: 3500 mAhஇதர சிறப்புகள்: பின்பக்கம் விரல்ரேகை ஸ்கேனர், ஸ்டீரியோ ஒலிப்பதிவு, 3.5 மிமீ ஆடியோ ஜாக், இரட்டை 4ஜி VoLTE, புளூடூத் 5 மற்றும் 802.11 ac வைஃபை ஆகியவை கொண்டது.நோக்கியா எக்ஸ்7 மொபைல் போனின் மறு பெயரிடப்பட்ட உலகளாவிய சாதனமே நோக்கியா 8.1 என்ற பேச்சு பரவலாகி வருகிறது. இந்தக் கணிப்பு உண்மையென்றால் நோக்கியா 8.1 போன் இந்தியாவில் ஏறக்குறைய 20,000 ரூபாய்க்கு கிடைக்கும்.