சென்னையில் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுகவினருக்கு தொடர்பே இல்லை என மறுப்பு!

சென்னையில் மதிமுக ஒருங்கிணைத்த ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தின்போது செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுகவுக்கு தொடர்பே இல்லை என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மதிமுக நடத்திய ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் டீக்கடை ஒன்றில் சிலர் தாக்குதல் நடத்தினர். இதனை செல்போனில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் படம் பிடித்தார்.

இதை கண்ட தாக்குதலில் ஈடுபட்டோர் செய்தியாளரை சராமாரியாகத் தாக்கினர். இத்தாக்குதலை நடத்தியவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் இதை திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், திமுகவுக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என உள்நோக்கத்துடன் நடத்தப்படும் பிரசாரங்களை ஊடகங்களும் செய்தி பத்திரிகைகளும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

More News >>