ஒரு இயக்குனரால் தமன்னா கனவு நிறைவேறியது!
சிரஞ்சீவியுடன் நடிக்க வேண்டும் என்ற தமன்னாவின் நீண்ட நாள் கனவை நினைவாக்கியுள்ளார் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி.
பாகுபலி படத்திற்கு பின்னர் தமன்னாவிற்கு மிகப்பெரிய மார்க்கெட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த படத்திற்கு பிறகு பெரிதாக தமன்னாவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.
இந்த ஆண்டு தமன்னா நடித்த ஸ்கெட்ச் படமும் பெரிதாக ஓடவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு வரிசை கட்டி 10 படங்களை தமன்னா இறக்கவுள்ளார். இதில், ஒன்று தான் சிரஞ்சீவி நடித்து வரும் பிரம்மாண்ட படமான சைரா நரசிம்ம ரெட்டி.
பாகுபலி படத்தை போலவே இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. அமிதாப்பச்சன், நயன்தாரா, விஜய்சேதுபதி, சுதீப் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தில் தமன்னாவிற்கு முக்கியமான ரோல் உள்ளதாம்.
இந்த படத்தில் நடித்ததன் மூலம் சிரஞ்சீவியுடன் நடிக்க வேண்டும் என்ற தமன்னாவின் நீண்ட நாள் கனவை இப்பட வாய்ப்பினை வழங்கியதன் மூலம் இயக்குனர் சுரேந்திர ரெட்டி நிறைவேற்றி வைத்துள்ளார் என மனம் திறந்து தமன்னா நன்றி தெரிவித்துள்ளார்.