தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று வானிலை மோமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில, பல்வேறு இடங்களில் இன்று விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியள்ள தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று காலையில் இருந்தே பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் திருவான்மியூர்ர, கிண்டி, எழும்பூர், புரசைவாக்கம், கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
மேலும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது. இதேபோல், நாகை, சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார்ர, தரங்கம்பாடி, கடலூர், திண்டுக்கல், விழுப்புரம், சேலம், நீலகரி மற்றும் கம்பகோணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மழை பெய்து வருகிறது.
மேலும், தென் தமிழகம், புதுச்சேரி, காவிரி டெல்டா பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆயவு மையம் தெரிவித்துள்ளது.