சூப்பர் ஈவினிங் ரெசிபி.. மரவள்ளிக்கிழங்கு வடை !
மழைக்கு ஏற்ற சூப்பரான ஈவினிங் ரெசிபி மரவள்ளிக்கிழங்கு வடை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோவெள்ளை மா - 1/4 கப்பெருஞ்சீரகம் - 1 தே.கரண்டிகறிவேப்பிலை - 1 நெட்டு( சிறிதாக அரிந்து)உப்பு -தேவையான அளவுபச்சை மிளகாய் -2-3 (வெட்டி)வெங்காயம் - 1/2 கப் ( நறுக்கியது)எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை :
மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி கழுவி, கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும்.
அத்துடன், மேலே 0குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வடை பதத்திற்கு குழைக்கவும்.
எண்ணெய்யை சூடாக்கி , வடைகளை தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமானதும் வடித்து எடுத்துக்கொள்ளவும்.
அவ்ளோதாங்க, சூடாகப் பரிமாற மாலை நேர சிற்றுண்டி ரெடி !