லுங்கி அணிந்து கள்குடிக்க அழைத்த அமலாபால் நெட்டிசன்கள் தாக்கு
நடிகை அமலாபால் லுங்கி அணிந்து கொண்டு கையில் கள்ளு பாட்டிலுடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் காட்டுப்பகுதிக்குள் சென்ற நடிகை அமலா பால், அங்கு லுங்கி அணிந்துகொண்டு கையில் ‘கள்ளு’ பாட்டிலுடன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, ‘லுங்கிக்கு பிரபலமான இடத்தில் இருக்கிறேன். இங்கு ஒவ்வொருவரும் மீன் சாப்பிட்டபடி கள்ளும் குடித்து வருகின்றனர்.
இன்று நல்லா குடிக்கலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம், வாங்க’ என அழைக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் சிலர், ‘லுங்கியில் நீங்கள் அசத்தலாக இருக்கிறீர்கள்’ என்றும் சிலர், ‘வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க’ என்றும் கமென்ட் போட்டுள்ளனர்.
அதே நேரம், நெட்டிசன்கள் பலர், கையில் கள்ளுடன் புகைப்படம் போட்டு கள்ளு குடிக்கலாம் என கூறியிருப்பதற்கு அவரை விமர்சித்து வருகின்றனர். இது சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.