பொங்கலுக்கு மீண்டும் மெர்சல் ரிலீஸ்
அட்லீ இயக்கத்தில், விஜய் மூன்று வேடங்களில் நடித்து வெளியான படம் மெர்சல்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட்ட மெர்சல் படத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி வசூலில் சாதனை படைத்த மெர்சல் படத்தை வருகிற பொங்கலுக்கு சிறப்பு காட்சியாக கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. மெர்சலின் சிறப்புக்காட்சிக்காக இதுவரை 500க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.