என் சாவுக்கு 3 போலீசார் மட்டும் தான் காரணம்- திருநங்கை நஸ்ரியாவின் அதிர்ச்சி வீடியோ
ராமநாதபுரம் மாவட்டம் முதல் திருநங்கை காவலர் நஸ்ரியாவின் மரண வாக்குமூலத்துடனான அதிர்ச்சி வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் திருநங்கை காவலர் நஸ்ரியா பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து தனது விடாமுயற்சியால் சொந்த மாவட்டத்திலேயே பணியாற்றும் வாய்ப்பு பெற்று சாதனை படைத்தவர்.
இந்த நிலையில் சக காவல்துறையினரால் மனரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான திருநங்கை நஸ்ரியா தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். எலி மருத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நஸ்ரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், காவல்துறையில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும், விரைவில் பணியை ராஜினாமா செய்வேன் எனவும் நஸ்ரியா கூறியுள்ளார். அவரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் 3 காவல் அதிகாரிகள் என்று மரணவாக்குமூலம் பதிந்த அவரது காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.