தமிழகத்தில் காவிப்படையின் ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்: ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்
தமிழகத்தில் காவிப்படையின் ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
திருச்சியில் மேகதாது அணை கட்ட ஒப்புதல் அளித்த மத்திய அரசைக் கண்டித்து இன்று திமுக ஒருங்கிணைத்த பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் மழை பெய்யாததால் தண்ணீர் இல்லை. புல் கூட இங்கே முளைக்காத நிலையில் தாமரை எப்படி மலரும் என சாடியிருந்தார்.
இதற்கு தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும்.
செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரை மலர செய்வோம்.
காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும். தாமரை நிச்சயமாக மலரும்.
இவ்வாறு தமிழிசை பதிவிட்டுள்ளார்.