விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் கொலுசுக்கடை ஓரத்திலே பாடலை சுட்டு மரணமாஸாக்கிய அனிருத்- வெடிக்கும் சர்ச்சை

தமிழ் சினிமா உலகம் ‘சுடுதல்’களால் நிறைந்தது என்பது மிகையல்லதான்... சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் மரண மாஸ் பாடல் இப்போது சர்ச்சையாகி உள்ளது.

மரண மாஸ் பாடல் வெளியிடப்பட்டு யூ டியூப்பில் இதுவரை 4,309,437 பேர் பார்த்துள்ளனர். இந்த பாடலை கேட்கும்போதே எங்கேயோ கேட்ட பாடலைப் போல இருக்கிறதே என உங்களுக்கு தோன்றும்.

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் விஷ்வா விஸ்வநாத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

வசனத்தைத் திருடுறாங்க...கதையைத் திருடுறாங்க...பையன் அனிருத்..music மட்டுமில்லாம rythm தையும் சுட்டுருக்கானே. ;)

முதல்ல இருக்கிற லிங்க். பேட்ட படத்தோட "மாஸ் மரணம்" பாடல்.

இரண்டாவது இருக்கிற லிங்க் விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணனின் "கொலுசுக்கடை ஓரத்திலே..." பாடல்.

ரெண்டு பாடல்களின் இசையையும், தாளத்தையும் ஒப்பிட்டுப்பார்த்து ஒரு முடிவுக்கு வாங்க மக்களே...

https://www.youtube.com/watch?v=HHk-Fk7wTfo

https://www.youtube.com/watch?v=A9SPMNxl94U

இவ்வாறு விஷ்வா விஸ்வநாத் பதிவிட்டுள்ளார்.

 

More News >>