பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் 12ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு சிறப்பு விடுமுறை
சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, வரும் 12ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சிறப்பு விடுமுளை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜனவரி 14ம் தேதி தைத்திருநாளின் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழக காலச்சாரம், பாரம்பரியத்தை பேணிக்காக்கும் பொருட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை (12ம் தேதி) சிறப்பு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நம் மாநிலத்தில் உள்ள அனைவரும் சீரிய முறையில் கொண்டாடும் பொருட்டும், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவச் செல்வங்கள் அவர்களது இள வயது முதற்கொண்டே தமிழர் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணிக்காக்கும் பொருட்டும், அவர்களது பெற்றோர் மற்றும் சுற்றத்தோடு இணைந்து உவப்புடன் களித்திடும் பொருட்டும், தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உறுப்பு கல்லூரிகளுக்கு சிறப்பு நிகழ்வாக விடுமுறை அளித்து ஆணையிடப்படுகிறது.இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.