சீனாவில் ஓநாய்களை வளர்க்கும் அதிசய இளம்பெண்.... இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

சீனாவில் இளம் பெண் ஒருவர் தனது வீட்டில் 36 ஒநாய்களை வளர்த்து வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில் ஸோ சின்யு (Zhou Xinyue) எனும் இளம்பெண் ஒருவர் 36 ஓநாய்களை வளர்த்து வருகிறார். 20 வயதான ஸோ சின்யு மங்கோலியப் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு சிறு வயதிலிருந்தே ஓநாய்கள் மீது மிகவும் விருப்பம் கொண்டவராக இருந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக தனது பண்ணை வீட்டில் அரிய வகையைச் சேர்ந்த 36 வெள்ளை ஓநாய்களை வளர்த்து வருகிறார். மிகவும் அபாயகரமான விலங்காகக் கருதப்படும் ஓநாயை கட்டிக் கொஞ்சுவதும், உப்பு மூட்டை போல் முதுகில் சுமந்து விளையாடுகின்ற இவரது வீடியோ தற்போது உலகம் முழுவதும் இணையத்தில் பரவி வருகிறது.

ஓநாய்களுக்கு மாமிச உணவுகளை தனது பற்களுக்கு இடையே வைத்து ஊட்டி விடுகிறார். இதுகுறித்து ஸோ சின்யு கூறுகையில் ஓநாய்கள் குறும்பு தனமாக இருக்கும்போது அதனை செல்லமாக அதட்டி உணவு தருவதாக தெரிவித்தார்.

மேலும் ஓநாய்கள் தன்னை தாக்காது, ஆனால் சில நேரங்களில் அவற்றின் கூர்மையான நகங்கள் கைகளில் கீறி விடும். ஆனால் இது முற்றிலும் எதிர்பாராத விதமாக தான் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More News >>