ரஜினியின்..ldquoஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சுrdquo பாடல் பொங்களுக்கு ரிலீஸ்

ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவித்தபோது, எனக்கு “ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு” என்று சொன்ன வார்த்தை தற்போது பாடலாக மாறி பொங்களுக்கு ரிலீசாக உள்ளது.

கடந்த மாதம் ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், இறுதிநாளான டிசம்பர் 31ம் தேதி தன்னுடைய அரசியல் நிலைப்பாடு பற்றி பேசினார். அப்போது பேசிய ரஜினி "இந்த மீடியாக்காரர்களைப் பார்த்துதான் எனக்குப் பயம். இரண்டு நாட்களுக்கு முன் ஒருவர் மைக்கை நீட்டி உங்க கொள்கைகள் என்னனு கேட்டார். ஒரு நிமிஷம் எனக்கு தலையே சுத்திருச்சு" என்றார்.

ரஜினியின் இந்த வார்த்தை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்திய அளவில் டிரெண்டிங் ஆகவும் ஆனது.

இந்நிலையில், விஜய் ஸ்ரீ இயக்கும் ‘தாதா 87’ என்ற படத்தில் இந்த வார்த்தையை கொண்டு ஒரு நிமிஷம் தலை சுத்தும் என்ற பாடல் அமைக்கப்பட்டுள்ளது.இயக்குனர் விஜய் ஸ்ரீ எழுதிய இந்தப் பாடலுக்கு லியாண்டர் லீ இசையமைத்து உள்ளார். இந்தப் பாடலை நடிகர் ஜனகராஜின் மகன் நவின் ஜனகராஜ் பாடியுள்ளார். பொங்கல் விருந்தாக இந்தப் பாடல் ரிலீசாக திட்டமிட்டுள்ளனர்.

More News >>