ஐந்து படங்களுடன் மோதும் கனா

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எடுக்கப்பட்டுள்ள படம் கனா. இந்த படம் டிசம்பர் 21 வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முதலில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எடுக்கப்பட்டுள்ள படம் கனா, இந்த படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கிறார்.

நடிகர், பாடகர் என பல திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். இளவரசு, ரமா, அந்தோனி பாக்கியராஜ், குணா, சத்யா என பலபேர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் மாரி 2 டிசம்பர் 21 வெளியாகும் என தனுஷ் அறிவித்திருந்தார். மேலும் ஜெயம் ரவியின் அடங்காமறு, அதர்வாவின் பூமராங், விஷ்னு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம், விஜய்சேதுபதியின் சீதக்காதி என வரிசையாக படங்கள் டிசம்பர் 21,22 அன்று வெளியாகவுள்ளது.

கனா படத்தின் ஷூட்டிங் முடிந்து ப்ரோமோஷன் வேலைகள் நடைப்பெற்று வருகிறது. மேலும் 21 படம் ரிலீசாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். ஏற்கனவே படங்களுக்கு தேதி ஒதுக்குவதில் சிக்கலாகியுள்ள நிலையில், கனா படத்தின் ரிலீஸ் டேட் கூறியதால் தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

More News >>