மக்களால் நான்! மக்களுக்காகவே நான்! ஜெயலலிதா என்னும் இமயம் சரிந்த தினம் இன்று!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திரையுலகில் தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர், மொத்தம் 115 படங்கள் நடித்துள்ளார். அதன்பின் எம்.ஜி.ஆரால் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் மறைவுக்குப் பிறகு, 1991-ம் ஆண்டு முதன்முறையாக தமிழக முதல்வராகப் பதவி ஏற்றார்.

தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகவும், 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். இந்நிலையில் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஆகவே, அவரின் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். அண்ணா சாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுகவினர் அமைதி ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு முன்னால் மேடை அமைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்திற்கு வரும் அனைத்து வாயில்களும் மூடிவைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் ஆண்டு நினைவு தினம்’ என சாலைகளில் வரையப்பட்டுள்ளன.

மேலும், ஏராளமான அதிமுக தொண்டர்கள் இன்று ஜெயலலிதா சமாதிக்கு செல்வார்கள். ஆகவே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

More News >>