வாட்டர்மெலன் கோழிக்கறி யூடியூப் புகழ் மஸ்தானம்மா காலமானார்
இந்தியாவின் மூத்த யூடியூப் கலைஞரும் 'வாட்டர்மெலன் சிக்கன்' வீடியோவால் புகழ்பெற்றவருமான மஸ்தானாம்மா காலமானார். அவருக்கு வயது 107.
ஆந்திராவை சேர்ந்த இவரின் யூடியூப் சேனலான 'கன்ட்ரி ஃபுட்ஸ்' , 12 லட்சம் பேரால் பின் தொடரப்படுகிறது. அவர் செய்து காட்டிய 'வாட்டர் மெலன் சிக்கன்' வீடியோ மிகவும் பிரபாலமானது.
குண்டூர் மாவட்டத்தின் தெனாலி அருகே உள்ள குடிவாடா பகுதியை சேர்ந்த மஸ்தானாம்மாவை முஸ்லீம் குடும்பம் தத்தெடுத்து வளர்த்தது. தனது 11 வயதில் தந்தையை இழந்தார். 22 வயதில் கணவரையும் இழந்து தனது 5 மகன்களில் 4 மகன்களையும் பறிகொடுத்தார்.
ஆகவே, அவர் தனது ஒரே மகன் டேவிட்டுடன் வசித்து வந்தார். டேவிட்டின் மகனும் கிராபிக்ஸ் டிசைனருமான லக்ஷ்மண், பாட்டியின் சமையலை வீடியோவாக எடுத்து, யூடியூபில் பதிவேற்றி வந்தார்.
அதில், குறிப்பாக ""வாட்டர்மெலன் கோழிக்கறி" வீடியோ இந்தியா முழுவதும் வைரலாகி பெரும் புகழைப் பெற்றது.