கிரிஸ்டியன் மைக்கேல் கைது: நாட்டை உலுக்கிய ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக 12 ஹெலிகாப்டர்கள் ரூ.3600 கோடி மதிப்பில் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது.

அந்த புகாரில் குளோபல் சர்வீசஸ் (துபாய்) மற்றும் குளோபல் டிரேட் அண்ட் காமர்ஸ் சர்வீசஸ் (லண்டன்) ஆகியவற்றை நடத்தி வரும் கிறிஸ்டியன் மைக்கேல் இடைத்தரகராக செயல்பட்டு,ஹெலிகாப்டர் பேரம் நடந்த போது 25 முறை இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளதாக சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் கூறியது.

இதையடுத்து, இந்த வழக்கில் முக்கிய நபராக கருதப்படும், கிறிஸ்டியன் மைக்கேல் கைது செய்யப்பட்டால் பேரம் நடந்த விவரங்கள், சர்வதேச தொடர்புகள் உள்ளி்ட்டவை தெரியவரும் என சி.பி.ஐ கூறுகிறது.

ஆகவே, அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பான வழக்கில் துபாய் நீதிமன்றம் மைக்கேலை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டது.

தற்போது கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் மர்மங்கள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News >>