ஹீரோவும் நானே வில்லனும் நானே டொவினோ தாமஸ்!

டொவினோ தாமஸ் வில்லனாக நடித்துள்ள மாரி 2 மற்றும் ஹீரோவாக நடித்துள்ள எண்டே உம்மாண்ட பேரு என்ற மலையாள படமும் ஒரே நாளில் ரிலீசாகயிருக்கிறது.

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 21,22 ஆகிய தேதிகளில் பல இளம் முன்னனி ஹீரோக்களின் படங்கள் ரிலீசாக உள்ளது. ஏற்கனவே ஜெயம் ரவியின் அடங்கமறு விஜய்சேதுபதியின் சீதக்காதி போன்ற படங்களின் ரிலீஸ் தேதியை தயரிப்பாளர்கள் சங்கம் மூலம் உறுதி செய்திருக்கும் நிலையில் மாரி 2 படமும் சங்கத்தின் அனுமதி இல்லாமல் இந்தப் போட்டியில் இணைந்துள்ளது.

இந்த படத்தின் ரிலீசில் தனுஷுக்கு இருக்கும் சந்தோஷத்தைவிட மாரி 2 படத்தின் வில்லன் அதிக குஷியில் இருக்கிறார். ஏனென்றால் அவர் ஹீரோவாக நடித்த எண்டே உம்மாண்ட பேரு என்னும் மலையாள படமும் டிசம்பர் 21 தான் ரிலீசாகவுள்ளது.

இதனால் ஒரே நாளில் தமிழில் வில்லனாகவும் மலையாளத்தில் ஹீரோவாகவும் தான் நடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீசாகிறது என்ற ஆனந்தத்தில் இருக்கிறார் டொவினோ தாமஸ்.

 

More News >>