சீனாவில் 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாகவுள்ள 2.0!
லைகா நிறுவனம் தயாரிப்பில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் அதிக பட்ஜெட் திரைப்படமான 2.0 சீனாவில் 10 ஆயிரம் தியேட்டர்களில் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகவுள்ளதாக லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த 10 ஆயிரம் தியேட்டர்களில் மொத்தம் 57 ஆயிரம் ஸ்க்ரீன்கள் உள்ளன. அதில், 47 ஆயிரம் ஸ்க்ரீன்களில் 3டி தொழில்நுட்பம் கொண்டவை.
ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவுக்கு ரஜினியின் 2.0 படத்தின் 3டி காட்சிகள் அருமையாக உள்ளதாக படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தங்கல், பாகுபலி உள்ளிட்ட படங்களின் வசூல் அதிகரிக்க காரணமாக சீனாவில் படம் ரிலீசானது அமைந்துள்ள, நிலையில், 2.0 திரைப்படமும், அங்கு ரிலீசாகி பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே படத்தின் 6 நாள் வசூல் 450 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாட்டிலைட் உரிமம் போன்றவற்றில் சில நூறு கோடிகளை படம் ஈட்டியுள்ளதால், ஆயிரம் கோடி ரூபாய் வசூலை 2.0 திரைப்படம் ஈட்ட அதிக வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.