யூடியூப் மூலம் ஒரே ஆண்டில் 154 கோடி ரூபாய் சம்பாதித்த 7வயது சிறுவன்!

யூடியூப் மூலம் ஒரு 7 வயது சிறுவன் இந்த ஆண்டு மட்டும் 154 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளான் என்று சொன்னால், அதனை கேட்கும் பலரும் காதில் பூ சுற்றாதே என்றும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வருவது போல, 154 கோடி என கிண்டலடிக்கும் நிலை தான் ஏற்படும்.

ஆனால், அது தான் உண்மை என்று போர்ப்ஸ் பத்திரிகை ஆதரத்துடன் வெளியிட்டால், உண்மையிலேயே பலருக்கும் மயக்கம் தான் வரும்.

சர்வதேச அளவில், சமூக வலைதளமான, யூடியூப் மூலம், அதிக வருமானம் ஈட்டியவர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அதில், உலகின் பல யூடியூபர்களை வெறும் பொம்மைகள் குறித்து விமர்சனம் செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த, 7 வயது சிறுவன், ரியான் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளான்.

கடந்த ஆண்டு சுமார் 70 கோடி ரூபாய் சம்பாதித்து 8வது இடத்தில் இருந்த சிறுவன் ரியான், 2018ல், 154 கோடி ரூபாய் சம்பாதித்து, பட்டியலில், முதலிடம் பிடித்துள்ளான்.ரியானுக்கு, 4 வயதாக இருக்கும் போது, 2015ல், 'ரியான் டாய்ஸ் ரிவியூ' என்ற, 'யூ டியூப் சேனல்' துவங்கப்பட்டது. இதில், சிறுவர்களின் விளையாட்டு பொருட்கள் குறித்து, ரியான் விமர்சனம் செய்து வருகிறான். இவன் அளிக்கும் விமர்சனம், பலரையும் கவர்ந்ததால், ஏராளமான விளையாட்டு பொருட்கள் பெரியளவில், 'ஹிட்' அடித்தன.ரியான் யூ டியூப் சேனலுக்கு, 1.7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். ரியான் விமர்சனம் செய்து வெளியிடும், 'வீடியோ'க்கள், 2,600 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளன. விளையாட்டு பொருட்களை விமர்சனம் செய்தது வாயிலாக மட்டும், 2018ல், 154 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, ரயான் சாதனை படைத்துள்ளான்.இவனை கவுரவிக்கும் வகையில், 'ரியான் வேர்ல்டு' என்ற பெயரில், பொம்மைகள் மற்றும் துணிகளை விற்பனை செய்ய, 'வால்மார்ட்' நிறுவனம், சமீபத்தில், ஒரு தனிப் பிரிவையே துவங்கி உள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து வருவதாக, அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

 

More News >>