17 வயது சிறுவனை கண்டதும் காதல் இளம்பெண்ணின் லீலைகளால் அதிர்ந்த போலீஸ்
சென்னையில், 17 வயது சிறுவனை காதலித்து, பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்த இளம்பெண்ணின் லீலைகளால் போலீசார் அதிச்சியடைந்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் லாக் நகரை சேர்ந்த பெண் சவிதா என்கிற வசந்தி (28). திருமணமான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கணவரை பிரிந்த சவிதா, பின்னர் பெங்களூருவில் பணிபுரிந்து வரும் நபரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இதனால், சவிதா தனது மூன்று குழந்தைகளுடன் சென்னையில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையே, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது உறவினரை பார்க்க சமீபத்தில் சவிதா சென்றுள்ளார். அங்கு, 17 வயது சிறுவனை சந்தித்த சவிதாவிற்கு பார்த்ததும் காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதாகவும், பல முறை உறவு வைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சவிதா தனது மூன்று குழந்தைகளையும் கணவரிடம் ஒப்படைத்துவிட்டு இரண்டாவது கணவரையும் விட்டுவிட்டு சிறுவனுடன் வீட்டைவிட்டு வெளியேறினார். சிறுவனை பல ஊர்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து அயனாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சவிதாவையும், சிறுவனையும் தேடி வந்தனர்.போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டதில், வெளியூரில் சுற்றித்திரிந்து வந்த சவிதாவையும், சிறுவனையும் சுற்றிவளைத்த போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில், சிறுவனிடம் ஆசைவார்த்தைகள் பேசி தனது வலையில் விழவைத்த சவிதாவை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும், சிறுவனை போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.