திருப்பதியில் செம்மரம் வெட்டியதாக தமிழர்கள் 13 பேர் கைது
ஆந்திரா மாநிலம், திருப்பதியில் செம்மரம் வெட்டியாக கூறி தமிழர்கள் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் வெட்டுவதாக அடிக்கடி தமிழர்களை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு, தமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதியில் உள்ள ஐத்தே பள்ளி வனத்தில் செம்மரம் வெட்ட முயன்றதாக 13 தமிழர்களை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 13 பேரும், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.