2.0படம் வசூல் சாதனை! 2 வாரங்களில் 500 கோடி கலெக்ஷன்!
ரஜினி நடித்து கடந்த வாரம் வெளியான 2.0 படம் 2 வாரங்களில் ரூ.500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
கடந்த வாரம் உலகம் முழுவதும் 7450 தியேட்டர்களில் வெளியாகிய 2.0 படம் ஹிந்தி, தெலுங்கிலும் நேரடியாக வெளியிடப்பட்டது. இந்திய சினிமாவின் டாப் நடிகர்களில் முக்கியமானவர்களான ரஜினியும், அக்ஷய்குமாரும் இணைந்தது, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது பெரும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தன.
இந்நிலையில் 2.0 படம் சென்னையில் முதல் நாள் வசூல் 2.74 கோடியாகவும், முதல் நான்கு நாள் வசூல் 12.9 கோடியையும் தொட்டது.
தற்போது 2 வாரங்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் 500 கோடி வசூல் செய்து தகர்க்க முடியாத சாதனையை படைத்துள்ளது.
இதை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
2.0-going-to-release-in-china