நெல் ஜெயராமன் குடும்பத்துக்கு இப்படியொரு உதவி செய்த சிவகார்த்திகேயன்!
இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் இன்று காலை 5.10 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 60.நெல் ஜெயராமன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக தலைவர் தமிழிசை, ஜி.கே. வாசன் உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனும் நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும், நெல் ஜெயராமனின் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியில் நாளை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அதற்கு ஆகும் மொத்த செலவையும் தான் ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், நெல் ஜெயராமனின் மகனின் படிப்பு செலவு முழுவதையும் தான் ஏற்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்த நெல் ஜெயராமன் 160க்கும் மேற்பட்ட அரிய வகை நெல் விதைகளை சேகரித்தவர்.
இப்படியொரு இயற்கை விவசாயிக்கு, தன்னால் முடிந்த உதவியை செய்ய வாய்ப்பு கிடைத்தது தனக்கு கிடைத்த பெருமை என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.